Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, May 28, 2015

இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?

ஆதார் அட்டை இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது.
ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.
இப்போது, எளிதாக இணையத்தில் ஆதார் அட்டை பதிவிறக்க முடியும் மற்றும் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இருப்பினும், இ ஆதார் அட்டையை பதிவிறக்க ஆதார் அட்டை விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்

ஆதார் அட்டையை பதிவிறக்க தேவையானவை

1. பதிவு ஐடி / ஆதார் எண்
2. ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படி
3. முழுப் பெயர்
4. அஞ்சல் குறியீடு எண்
5. பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்
இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி
இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி
ஆதார் கடிதம் மற்றும் அட்டை
மேலும் ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்
செயல்பாடு 1:
முதலில் ஆதார் அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இதை கிளிக் செய்யவேண்டும். Click here  பின்பு 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும், ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் உள்ள 14இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணை உள்ளிடவும். ஆதார் அட்டைக்கு தேவையான விவரங்கள் அதாவது பதிவு எண், தேதி, நேரம், பெயர், பின்கோடு மற்றும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்ச்சா(captcha)வை பூர்த்தி செய்யவும்.
செயல்பாடு 2:
கொடுக்கபட்ட தரவுகள் சரியாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு OTP(ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும்.அதை உரைபெட்டியில் உள்ளிடவும்.
செயல்பாடு 3:
OTP (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடப்பட்டதும் ஆதார் அட்டையை பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டைக்கு பதிலாக பயன்படுத்தும் கடிதத்தை கொண்ட PDF கோப்பை பதிவிறக்க கேட்கும்.

No comments:

Post a Comment