Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Monday, June 15, 2015

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் : பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.

பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா திட்டம்:

நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது.
மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார்கள்.

மேலும், அனைவருக்கும் வங்கி கணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.

விபத்து காப்பீடு :

இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ‘ஆதார்’ அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

பிரதமர் கடிதம் :


இந்த திட்டம் குறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இ–மெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

நாடு முழுவதும் 7 கோடி குடும்பத்தினருக்கு நாம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இதை தேசிய முன்னுரிமை பணியாக கருத வேண்டும். இது கடினமான பணியாக இருந்தாலும், இந்த சவாலை சந்திக்க வேண்டும்.

இன்னும் பலருக்கு வங்கி கணக்கு இல்லாததால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, இதை அவசர பணியாக கருதி செய்ய வேண்டும். நாட்டில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் யாரும் விடுபடாதவாறு தாங்கள் பணியாற்ற வேண்டும்.

வங்கி கணக்கு இருந்தால், கடன் வசதியை பெற்று, அந்த மக்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.

வங்கி கணக்கு வைத்திருப்பது முக்கிய பாதுகாப்பு அம்சம்:

பெண்களுக்கு நிதி அதிகாரம் அளிப்பதில் வங்கி கணக்குகள் முக்கிய பங்காற்றும்.'ஜன்-தான் யோஜனா' திட்டத்தின் கீழ் இன்று 1.5. கோடி வங்கி கணக்கு பெறுபவர்கள் காப்பீடு அம்சமும் பெறுவார்கள். நாடு விடுதலை பெற்று 68 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் 68 சதவீதம் மக்கள் வங்கி சேவையில் இணைவில்லை. 

பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா திட்டம்


ஏழ்மையை விரட்ட, நிதி தீண்டாமைக்கு முடிவுகட்ட வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது. அதிக புதிய கிளைகள் திறக்கப்படும், அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்ல புதிய உள்கட்டமைப்பு அமைக்கப்படும். தபால் அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் வங்கி துறையில் பயன்படுத்தப்படும். இந்த முழு திட்டமும் ஏழைகளுக்கானது. ஏழ்மையை இந்தியாவை விட்டு விரட்டும் நடவடிக்கையாகும். 

வங்கி கணக்கு தொடங்குபவர்கள் ஜனவரி 26ம் தேதிக்கு ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெறுவார்கள். சேமிப்பு என்பதே நமது நாட்டின் இயல்பு. நாம் கடன் அட்டைகள் சார்ந்து இல்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment