Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Wednesday, July 22, 2015

மோடி அரசின் முக்கிய புதிய திட்டங்கள்

மோடி அரசின் முக்கிய புதிய திட்டங்கள்
=====================================
01) பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்)
-------------------------------------------------------------------------------------------------------------
---

திட்டம் துவங்கப்பட்ட நாள் : ஆகஸ்ட் 28., 2014

இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.



இத்திட்டத்தில், எந்த வைப்புத் தொகையும் இல்லாமல், ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படும்.

• இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ‘ஆதார்’ அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை.

ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும்.

மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

• ஒவ்வொருவருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடும் செய்யப்படும்.ஆறு மாதங்களுக்கு பின், 'ஓவர் டிராப்ட்' தொகையாக, 5,000 ரூபாய், வங்கிகள் வழங்கும்.அந்த தொகையை முறையாக திருப்பி செலுத்தினால், 15 ஆயிரம் ரூபாய் வரை, கடன் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் இயக்குனராக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது.

No comments:

Post a Comment