Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, July 21, 2016

தமிழகச் சட்டசபை 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் ?

தமிழகச் சட்டசபையில் இன்று காலை 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஒ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருத்தப்பட்ட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்ததை போலவே, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது துறைவாரியாக அவர் ஒதுக்கிய நிதி விவரம்:

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.79% ஆக இருக்கக் கூடும் என கணிப்பு -தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ40,533.84 கோடி

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்கான நிதி உதவித் திட்டம் தொடரும்

ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ703.16 கோடி நிதி ஒதுக்கீடு

சத்துணவுத் திட்டத்துக்கு ரூ1644 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு அலுவலர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் பழங்குடியினர் தொழில் தொடங்க ரூ130 கோடி நிதி ஒதுக்கீடு

முதியோர் உதவித் தொகை திட்டத்துக்கு ரூ3,820 கோடி ஒதுக்கீடு
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்துக்கு ரூ582.58 கோடி

பள்ளி மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு ரூ2,705 கோடி நிதி ஒதுக்கீடு

கல்வி உரிமை சட்டப்படி அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க ரூ125.70 கோடி ஒதுக்கீடு

பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த ரூ330.60 கோடி ஒதுக்கீடு

முத்துலெட்சுமி மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ668 கோடி நிதி ஒதுக்கீடு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதல் மாநில விருதை தமிழகம் பெற்றுள்ளது

10 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 7 மாவட்ட தலைமை மருத்துவமனை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்

சுகாதாரத்துறைக்கு ரூ9,073 கோடி நிதி ஒதுக்கீடு

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50% ஆக அதிகரிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி கிடைக்கும்

18 கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

வீட்டு வசதித் துறைக்கு ரூ689 கோடி ஒதுக்கீடு

தூய்மை தமிழகம் திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ11,820 கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.66 லட்சம் வீட்டு கழிவறைகள்

20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்

இலவச வேட்டி, சேலைக்கு ரூ487.45 கோடி ஒதுக்கீடு

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுக்கு ரூ470 கோடி நிதி ஒதுக்கீடு

நடப்பாண்டில் 12,000 கறவை மாடுகள் வழங்கப்படும்

ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ21,186 கோடி நிதி ஒதுக்கீடு

வெள்ளம் பாதித்த பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ30 கோடி ஒதுக்கீடு

முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ23,500 கோடி முதலீடு வந்துள்ளன

தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ2,104.49 கோடி ஒதுக்கீடு

ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது

இலவச லேப்டாப், சீருடைகள், பாடநூல்கள் வழங்க ரூ2,705 கோடி ஒதுக்கீடு

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ32.94 கோடி ஒதுக்கீடு

500 கிராம கோவில்கள் சீரமைக்கப்படும்

2.49 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது

அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 18,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்

100 யூனிட் இலவச மின்சாரத்தால் 1.90 கோடி பேர் பயனடைகின்றனர்

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை

மின்சார தேவை மற்றும் உற்பத்தி இடையே இடைவெளி சரி செய்யப்பட்டுவிட்டது

5 ஆண்டுகளில் 8432.50 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது

இணையம் வழியே ரேசன் கார்டு முகவரி மாற்றத்துக்கு ஏற்பாடு

அடுத்த 5 ஆண்டுகளில் 13,000 மெகாவாட் அனல்மின்சாரம், 2500 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ1230 கோடி ஒதுக்கீடு

நெல்லை- கொல்லம், ஒட்டன்சத்திரம்- திருப்பூர் சாலைகள் 4 வழி சாலையாகிறது -ரூ1541 கோடி செலவில் 4 வழிச் சாலைகளாக மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்

ரூ6 ஆயிரம் கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்படும்

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்

நீர்வளங்கள் ஆதார துறைக்கு ரூ3402 கோடி ஒதுக்கீடு

தொழில்துறைக்கு ரூ2104.99 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும் 30 கோயில்களில் அன்னதான திட்டம்

வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கான நிதி உதவித் தொகை அதிகரிப்பு

வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கு ரூ 652.78 கோடி ஒதுக்கீடு

சென்னை, சுற்றுப்புற ஏரிகளை சீரமைக்க படிப்படியாக நடவடிக்கை

மீன்வளத்துறைக்கு ரூ 743..73 கோடி ஒதுக்கீடு

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கீடு

2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கீடு

2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு

பால் பொருட்களைத் தயாரிக்கும் மையம் மதுரையில் அமைக்கப்படும்

பள்ளி கல்வித்துறைக்கு ரூ24,130 கோடி நிதி ஒதுக்கீடு

சுகாதார துறைக்கு ரூ9073 கோடி ஒதுக்கீடு

கறவை மாடு வாங்க நிதி ரூ30,000-ல் இருந்து ரூ35,000 ஆக உயர்வு

1 லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்படும். இலவச ஆடு, மாடு வழங்க ரூ182 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு ரூ 1429.94 கோடி

கடலூர் மாவட்டத்தில் ரூ140 கோடி செலவில் ஆற்றங்கரைகள் மேம்படுத்தப்படும்


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ 208 கோடி ஒதுக்கீடு

பண்ணை இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும்

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ 928 கோடி ஒதுக்கீடு

தோட்டகலைத்துறைக்கு ரூ511 கோடி ஒதுக்கீடு

பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

உதவித் திட்டங்கள், மானியங்களுக்கு ரூ68,211 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த ரூ183.24 கோடி ஒதுக்கீடு

உணவு தானிய உற்பத்தி இலக்கு ரூ147 லட்சம் மெட்ரிக் டன்

உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ206 கோடி ஒதுக்கீடு

வருவாய்த்துறைக்கு ரூ5600 கோடி ஒதுக்கீடு

அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர கூட்டுப் பட்டாக்கள் வழங்கும் திட்டம்

போக்குவரத்து துறைக்கு ரூ1295.08 கோடி நிதி ஒதுக்கீடு 2,000 புதிய அரசு பேருந்துகள் வாங்க ரூ125 கோடி ஒதுக்கீடு

மின்சாரத்துறைக்கு மானியமாக ரூ13,856 கோடி ஒதுக்கீடு

லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்

தமிழக அரசின் கடன் ரூ2.52 லட்சம் கோடி

திருத்திய பட்ஜெட் மதிப்பீடு 1,48,175.09 கோடி

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை

சிறைச்சாலை துறைக்கு ரூ282.92 கோடி ஒதுக்கீடு

தீயணைப்புதுறைக்கு ரூ230.7 கோடி ஒதுக்கீடு

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும்

சமூகல நலத்துறைக்கு ரூ4512.32 கோடி ஒதுக்கீடு

100 யூனிட் இலவச மின்சாரத்தால் அரசுக்கு ரூ1607 கோடி இழப்பு

நாட்டிலேயே முதல் முறையாக கடற்கரை ஊர்க்காவல் படைக்கு 500 மீனவர் இளைஞர்கள் சேர்ப்பு

தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாத சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன

உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ1,000-ல் இருந்து ரூ1,500 ஆக உயர்வு

தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ32.4 கோடி ஒதுக்கீடு

தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ703.16 கோடி

மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ105.97 கோடி ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ396.74 கோடி ஒதுக்கீடு

அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ2,000 கோடி ஒதுக்கீடு

மின்சார மானியத்துக்கு ரூ9,007 கோடி ஒதுக்கீடு

திறன்மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ150 கோடி ஒதுக்கீடு

500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் ரூ6,636.08 கோடி இழப்பு

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ4 ஆயிரத்தில் இருந்து ரூ5,000 ஆக உயர்வு

நகர்ப்புற வாழ்வாதார திட்டத்துக்கு ரூ350 கோடி ஒதுக்கீடு

வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு ரூ355.81 கோடி ஒதுக்கீடு

ரூ422 கோடியில் போலீசாருக்கு 2673 வீடுகள் கட்டித் தரப்படும்

ரூ52.64 கோடியில் ஆற்றங்கரை ஓரங்களில் மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்படும்

ரூ24.58 கோடியில் வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரப்படும்

சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ300 கோடி ஒதுக்கப்படும்

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ15,854.47 கோடி

அடுத்த ஓராண்டில் ரூ420 கோடியில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20,000 வீடுகள் கட்டப்படும்

அடுத்த ஆண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்

5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment