Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Wednesday, November 9, 2016

பொது மக்கள் வசதிக்காக வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் & வங்கி உதவி மையம் திறப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் வழக்கம் போல செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு : 

ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார். 
ஆனால், இன்று வங்கிகள் விடுமுறை. ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்காததால் அத்யாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2-வது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2000 ரூபாய் நோட்டு விநியோகம்: வாங்க மக்கள் ஆர்வம் : 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ரூ 2,000 நோட்டை ஆர்வத்துடன்  வாங்கிச் செல்கின்றனர்.

2000 ரூபாய் நோட்டு விநியோகம்: வாங்க மக்கள் ஆர்வம்

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ 1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய 500, 1000 நோட்டுகளை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மொத்தம் 8 கவுண்டர்களில் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ரிசர்வ் வங்கியில் மாலை நான்கு மணி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். 

சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அந்தந்த வங்கிக் கணக்கு உள்ளவர்கள் இன்று மாலை 4 மணி வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி 2000 ரூபாய் புதிய நோட்டுகளை பெறலாம். இதற்கென அனைத்து வங்கிகளிலும் விண்ணப்பங்கள் கொடுப்பட்டு வருகின்றன. அந்தந்த குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் மதியத்திற்கு மேல் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. காலையிலிருந்து மக்கள் கூட்டம் வங்கிகளில் அலைமோதி வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு : 

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் 044- 2538 1390 அல்லது 2538 1392 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள் :

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர்.  ஏ.டி.எம். மையங்களிலும் நாளைதான் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுச் செல்கின்றனர்.

பல்வேறு பகுதிகளில் 500 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்பதால் புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுகின்றன. 

இதற்காக வங்கிகளில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து கொடுத்து பணம் பெற்றுச்செல்கின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் மாற்றுவதற்காக மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பல்வேறு வங்கிகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment