Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, November 8, 2016

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு மாற்ற முடியும்? நீங்களே வங்கிக்கு போக வேண்டுமா? : ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்:

ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இவை. 

சென்னை: கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என யோசிக்கிறீர்களா? அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்லப் போகிறீர்களா? 

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்: 

  • கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


  • மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன. அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ 500, ரூ 2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 


  • ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம்.


  •  உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம்.


  •  ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.


  •  நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். 


  • ஏடிஎம்கள் இன்று இயங்காது. ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 


  • நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 


  • வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.


  • ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 


  • டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும்.


  • நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 


  • நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 


  • ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 


கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in, www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் 

பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

இந்தியா முழுவதும் நேற்று இரவு திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவைகளை நாளை (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் தங்களது வங்கிகள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம்.

அதேபோல ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளவும் முடியும். 24-ந் தேதி வரை ஒருவர் ஒருசமயத்தில் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும்.

டிசம்பர் 30-ந் தேதிக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள் ரிசர்வ் வங்கியில் ஒரு பிரகடனம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா நேர்மையான, ஊழலற்ற நாடாக விளங்குவதற்காக அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி 10-ந் தேதி (நாளை) முதல் இவைகளை வெளியிடுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும்.

உங்களை வேறு யாரும் கள்ளத்தனமான பணத்தை மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். இரவுக்கு பின்னர் ஒருவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவர்களது பொறுப்பு தான். புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை படமும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும். கண் பார்வையற்றவர்களும் இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் அடையாள குறியீடுகள் இருக்கும்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்தியாவில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும்?

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனை உள்ள சில இடங்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரு தினங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:-

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்.

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்.

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் 

ரயில் டிக்கெட் புக்கிங், அரசு பேருந்து மையம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்களில் நோட்டுகள் பெறப்படும்.


பிரதமர் அறிவிப்பு எதிரொலி: ஏ.டி.எம். மையங்களில் அலைமோதும் கூட்டம்

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், வங்கிகளில் டிசம்பர் 30-ம் தேதிக்குள் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நோட்டுக்கள் 10-ம் தேதி புழக்கதிற்கு வருகிறது. இந்த நடைமுறைகள் அமலுக்கு வருவதையொட்டி, நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது. வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன. 

இந்த முடிவு யாருக்கும் தெரியாது என்றும், இது மிகவும் சாதகமான நடவடிக்கை என்று பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் புதிய எண்களுடன் கூடிய 10, 20, 100 மற்றும் 1000 நோட்டுக்கள் கூடுதலாக அச்சிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் நாளை காலையில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். சிறிய பெட்டிக்கடை, பால் கடை முதல் பலகாரக் கடை வரையில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். எனவே, 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த அறிவிப்பினால் வங்கிகள் விடுமுறை : 

வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்கள் மூடல்.. பண பரிமாற்றத்தில் அதிரடி கட்டுப்பாட்டு.. ஆர்பிஐ அறிவிப்பு..! நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஏடிஎம் இயந்திரமும் இயங்காது. பண பிரமாற்றங்கள் அதிகளவில் முடக்கம்

மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவித்த உள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ந்துபோய் உள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி மக்களின் அன்றாட பண புழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

வங்கிகள் விடுமுறை : 

புதன்கிழமை (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவில் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ஊரக வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஏடிஎம் இயந்திரங்கள்: 

அதேபோல் ஏடிஎம் இயந்திரம், பணம் டெப்பாசிட் செய்யும் இயந்திரம் என அனைத்தும் இன்று செயல்படாது. ஆனால் இணையம் மற்றும் மொபைல் வங்கியியல் இயங்கும்.

வங்கிகளின் உள் வேலைகள் : 

வங்கிகள் இன்று ஒரு நாளுக்குள் தனது கஜானா மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளைச் செய்ய உள்ளது.

2,000 ரூபாய் மட்டுமே.. அதன்பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நவம்பர் 19ஆம் தேதி முதல் இந்த அளவுகோல் 4000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது

வங்கியில் பணம் எடுத்தல்: 

மேலும் வங்கி வைப்புக் கணக்கில் இருந்து வித்டிரா அளவு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயாகவும், ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே அனுமதி அளிக்கிறது.

ஆர்பிஐ: 

 நவம்பர் 10ஆம் தேதி முதல், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனகள், அறக்கட்டளைகள், என அனைத்துத் தரப்பினரும், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கிளையிலும் மொத்தமாக மாற்றிக்கொள்ளலாம். மாற்றப்படும் தொகை அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் மட்டும் அல்லாமல் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முழுமையாகக் குறைக்க முடியும்

No comments:

Post a Comment